- மற்றவர்களின் எல்லாத் தேவைகளையும் பூர்த்திச் செய்தால்தான் உனக்கு நல்லவன் என்ற பெயர் கிடைக்குமானால் அந்தப் பெயர் உனக்கு வேண்டாம்
- வெற்றியோ தோல்வியா எதுவரினும் கடமையைச் செய்வோம்
- யார் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும் நேர்மையும் வெளியாகும் போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்
- தன்னை உயர்ந்தவனாகவும் மற்றோரைத் தாழ்ந்தவனாகவும் நினைப்பவன் ஒரு மனநோயாளி
- எவனொருவன் தானே சரணடையாமல், மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல், எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிசத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே சுதந்திர மனிதன்
- அறிவு, நன்னடத்தை, சுய மரியாதை இவையே நான் வணங்கும் தெய்வங்கள். இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை
- வறுமை என்பது உடன் பிறந்தது. தவிர்க்க முடியாதது. தீர்க்க முடியாதது என்றெண்ணுவது உங்களின் மடமை
- அடிமை வாழ்வுதான் கிடைத்த கதி என்ற எண்ணத்தைக் குழித்தோண்டிப் புதையுங்கள்.
- ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள், அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்
- எவன் ஒருவன் தன் உரிமைகளை எப்பொழுதும் தற்காத்துக் கொள்ளத் தயாராக இருக்கிறானோ, யார் ஒருவன் பொது விமர்சனத்துக்கு அச்சப்படாமல் இருக்கிறானோ, அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுயமரியாதையும் பெற்று இருக்கிறானோ, அவனே சுதந்திரமான மனிதன்
- உலகில் யாரும் தெய்வீகக் குணங்களுடன் பிறப்பது இல்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பொறுத்து. முன்னேற்றமோ வீழ்ச்சியோ ஏற்படுகிறது
- மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டால் யாரும் உயர்ந்த நிலையை அடைய இயலும்
- ஆயிரம் ஆண்டு காலம் அடிமையாய் வாழ்வதைவிட அரை நிமிடமேனும் சுதந்திர மனிதனாக வாழ்ந்து இறப்பது சாலச் சிறந்தது.
- அறிவைத் தேடி ஓடுங்கள். நாளைய வரலாறு உங்கள் நிழலைத் தேடி ஓடிவரும்.
The world is full of surprises, and some news stories truly stand out. From unexpected discoveries to heartwarming moments and strange headlines, these stories break the routine and remind us how interesting life can be. In this blog, we explore the most unique and fascinating news from around the world. Get ready to be informed, entertained, and maybe even inspired.
Wednesday, 16 September 2020
இந்தியாவின் அரசியலமைப்பின் தந்தைஅம்பேத்கரின் சாகாவரிகள்
Friday, 4 September 2020
அழிவு சக்தியால் உருவான நோபல் விருது
![]() |
அந்த அவப்பெயர் அவருக்குக் கிட்டக் கூடாது என்றும் அந்தக் கலங்கத்தைத் துடைக்க ஒரு வழியைச் சிந்தித்தார் ஆல்பிரட் . நோபல் சகோதரர்கள் லுட்விக் மற்றும் ராபர்ட் காஸ்பியன் கடலோரம் உள்ள எண்ணெய் கிணறுகளை பயன்படுத்தி அவர்களது சொந்த உரிமையில் மிகவும் பணக்காரராக மாறினர். நோபலும் இதில் முதலீடு செய்து புதிய எண்ணெய் பகுதிகளின் வளர்ச்சி மூலம் பெரும் செல்வத்தை குவித்தார். தான் ஈன்ற செல்வம் அனைத்தையும் உலக நலனுக்காகவும் மனீடக் குலத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பாடுப்படுபவர்களுக்குப் பரிசாக வழங்க எண்ணினார். அவர் நிறுவிய 90-க்கும் மேற்பட்டத் தொழிற்சாலைகளிலிருந்தும் ரஷ்யா எண்ணெய் கிணறுகளில் இருந்து கிட்டும் முதலீடுகளிலிருந்தும் கிட்டியப் பணத்தைக் கொண்டு நோபல் அறக்கட்டளையை நிறுவினார்.
1890-ஆம் ஆண்டு தன்னுடைய உயிலில் தனக்குச் சொந்தமான 9 மில்லியன் டாலர் பணத்தை தன்னுடைய அறக்கட்டளைக்கு எழுதி வைத்தார். அந்தத் தொகையில் இருந்து கிடைக்கும் வட்டிப் பணத்தைக் கொண்டு ஆண்டுதோறும் 5 வெவ்வேறு துறைகளில் மிகச் சிறந்த சேவையாற்றியவர்களுக்குப் பரிசுகள் தர எண்ணினார். 1896- ஆம் ஆண்டு மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவால் டிசம்பர் மாதம் 10-ஆம் திகதி இத்தாலியில் இயற்கை ஏய்தினார். தன்னை உலகம் அழிவுச் சகிதியைக் கண்டுபிடித்த நோபல் என்று தூற்றக் கூடாது என்று எண்ணினார்.
அவரின் மரணத்திற்கு பின், 1901-ஆம் ஆண்டு முதன் முதலில் நோபல் பரிசு வழங்கத் தொடங்கப்பட்டது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி என 5 துறைகளில் ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்க்கும் பெரும் நன்மை பயக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் நோபல் விருது வழங்கப்பட்டது. 1969- ஆம் ஆண்டு ஆறாவது துறையாகப் பொருளாதாரத்தையும் இணைத்தனர். இந்த நோபல் விருது வழங்கும் விழா ஆல்பிரட் நோபல் மறைந்த தினமான டிசம்பர் 10-ஆம் திகதியில் ஒவ்வொரு ஆண்டும் நடைப்பெற்று வருகின்றது. இவ்விழா ஆல்பிரட் பிறந்த நாடான சுவீடனில் உள்ள ஸ்டாக்ஹோல்மில் நகரத்தில் நடைப்பெறுகின்றது. அமைதிக்கான நோபல் விருது மட்டும் நார்வே நாட்டின் தலைநகரான ஒஸ்லோவில் நடைப்பெறுகின்றன.
1901-2019 ஆம் ஆண்டு வரை 919 பேரும் 24 அமைப்புகளும் நோபல் விருதுகளைப் பெற்றுள்ளனர். இரண்டாம் உலகப் போர் ஏற்பட்ட 3 ஆண்டுகளில் நோபல் விருது விழா அரங்கேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வெற்றியாளர்களும், தங்கப் பதக்கம், நற்சான்றிதழ் மற்றும் 8459404 அமெரிக்க டாலரும் பரிசாக வழங்கப்படுகின்றது. இதுவரை 10 இந்தியர்கள் நோபல் பரிசினை பெற்றுள்ளனர். அதில் 3 பேர் தமிழர்கள் என்று நினைக்கும் தருணம் நம்மை மெய்சிலிரிக்க வைக்கின்றது. 1930-இல் சர்.சிவி ராமன், 1983-இல் சுப்ரமணியன் சந்திரசேகர் மற்றும் 2009-இல் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ஆகிய மூவரும் நோபல் விருது பெற்ற தமிழர்கள் ஆவர்.
தன்னை அழிவு சக்தி உருவாக்கியத் தீயவன் என்று தூற்றாமல் உலகின் நலனுக்காகவும் மனிதக் குலத்தின் மேன்மைக்காகவும் உழைக்கும் அறிவாளிகளைக் கௌரவிக்கும் நோபல் ஒரு சிறந்த மனிதர் என்று அகிலம் நினைக்க வேண்டும் என்று எண்ணிய அவரின் ஆசை நிறைவேறியது. ஒவ்வொரு ஆண்டு நோபல் விருது வழங்கப்படும் தருவாயில் இன்றளவும் அவரின் புகழை இந்த மண் பாடுகிறது. அவரின் நோக்கமும் சிந்தனையும் போற்றத்தக்கது.
நூறாவது அகவையில் தடம் பதிக்கின்றார் மலேசியாவைச் செதுக்கிய சிற்பி
படம் 1: பிறந்த நாள் வாழ்த்து 2025-ஆம் ஆண்டு 10-ஆம் தேதி மலேசிய அரசியல் வரலாற்றில் 100 வயதை எட்டிய முதல் அரசியல் தலைவர் என்ற பெருமையை நா...

-
புரியாதப் புதிராய் இருக்கும் சிதம்பர இரகசியம் சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில் என்ற தலத்தின் பெயரைக் கேட்டால் நம் நினைவிற்கு வருவது ச...
-
படம் 1: பிறந்த நாள் வாழ்த்து 2025-ஆம் ஆண்டு 10-ஆம் தேதி மலேசிய அரசியல் வரலாற்றில் 100 வயதை எட்டிய முதல் அரசியல் தலைவர் என்ற பெருமையை நா...
-
நாட்டையே உலுக்கி வரும் ஆட்டிசம் (Autism) குறைப்பாடுள்ள ஆறு வயது சிறுவன் ஜெய்ன் ராயானின் கொலை வழக்கு பலரது நெஞ்சைப் பதற செய்தது. இந்த அ...