2025-ஆம் ஆண்டு 10-ஆம் தேதி மலேசிய அரசியல் வரலாற்றில் 100 வயதை எட்டிய முதல் அரசியல் தலைவர் என்ற பெருமையை நாட்டின் நவீனமயத் தந்தையாகத் திகழும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹம்மத் தன் வசமாக்கியுள்ளார். மகாதீரின் நூற்றாண்டு என்பது மலேசியாவின் நூற்றாண்டும் கூட.
The world is full of surprises, and some news stories truly stand out. From unexpected discoveries to heartwarming moments and strange headlines, these stories break the routine and remind us how interesting life can be. In this blog, we explore the most unique and fascinating news from around the world. Get ready to be informed, entertained, and maybe even inspired.
Wednesday, 9 July 2025
நூறாவது அகவையில் தடம் பதிக்கின்றார் மலேசியாவைச் செதுக்கிய சிற்பி
படம் 1: பிறந்த நாள் வாழ்த்து
இன்று துன் மகாதீரின் நூறாவது பிறந்த நாள் கொண்டாட்டம் மட்டுமல்ல. மலேசியாவின் நவீன வளர்ச்சிப் பாதைகளுக்கு வழித்தடம் அமைத்து கொடுத்து ஒரு நூற்றாண்டு தேசிய வரலாற்றை உருவாக்கிய தலைவரை நினைவுக் கூர்ந்து பார்க்கும் நாளாகும்.
1925-ஆம் ஆண்டு ஜூலை 10-ஆம் தேதி, கெடா அலோர் ஸ்டாரிலுள்ள கம்போங் செபெராங் பேராக்கில் முஹம்மத் இஸ்கண்டார் - வான் தெம்பாவான் வான் ஹனாப்பி தம்பதிக்கு இளைய மகனாகப் பிறந்த துன் டாக்டர் மகாதீர் காலணித்துவ ஆட்சி முதல் நவினமயமாக்கல் மாற்றங்களைக் கடந்து பயணிக்கும் நாட்டின் மூத்த தலைவராவார்.
மலேசிய வரலாற்றில் இரு முறை பிரதமர் பதவியில் அமர்ந்து நாட்டின் நலனுக்காகப் பல முக்கிய முடிவுகளை எடுத்து, சில தருணங்களில் விமர்சனங்களை எதிர்கொண்டார் என்பதை யாராலும் மறுக்க இயலாது.
இன்று மலேசியா பல துறைகளில் மேம்பட்டு தனக்கென ஓர் அடையாளத்தைக் கொண்டுள்ளது. இந்த மேம்பாட்டில் துன் டாக்டர் மகாதீரின் பங்களிப்பை அளவிட முடியாது.
என்ற திருக்குறளுக்கு ஏற்ப மலேசியாவை வளர்ச்சியடைந்த நாடாக உருமாற்றும் சிந்தனை மகாதீரின் மனதில் ஆழமாக வேரூன்றியது.
அவரின் உயர்வான எண்ணம் போல மலேசியா உலகளவில் பல புதிய பரிணாமங்களைக் காணத் தொடங்கியது.
தனது தலைமைத்துவத்தின் கீழ் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை, புத்ரா ஜெயா, பெட்ரோனாஸ் இரட்டை கோபுரம் போன்ற பல முக்கிய திட்டங்களை முன்னெடுத்து அதில் மகாதீர் வெற்றிக் காண்டார்.
படம் 2: வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை,
புத்ரா ஜெயா, பெட்ரோனாஸ் இரட்டை கோபுரம்
2020-ஆம் ஆண்டிற்குள் மலேசியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றியமைப்பதற்காக 1991-ஆம் ஆண்டு வாவாசான் 2020 தொலைநோக்கு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இது மலேசியாவை முற்றிலும் மேம்பட்ட நாடாக மாற்றும் கனவுக்கு துவக்கமாக அமைந்தது.
மலேசியாவை ஒரு தொழில்துறை நாடாக மாற்ற வேண்டும் என்றால் முதலில் ஒரு தேசிய வாகனத்தை உருவாக்க வேண்டும் என்பது துன் மகாதீரின் லட்சியக் கனவாகும்.
நாட்டின் முதல் தேசிய காரான புரோட்டானை உருவாக்கியது துன் மகாதீரின் பெருமைமிக்க சாதனைகளில் ஒன்றாகும். 1985 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புரோட்டான் சாகா வெறும் காராக மட்டுமல்லாமல் ஒரு தேசிய சின்னமாகவும் மாறியது.
படம் 3: நாட்டின் முதல் கார்
பொருளாதாரத்திலும், அவர் எடுத்த முடிவுகள் முக்கியமானவை. 1982-ஆம் ஆண்டில் அறிமுகமான கிழக்கு நோக்கிய கொள்கை மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற கிழக்கு ஆசிய நாடுகளின் உழைப்பு நெறி, தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை அணுகுமுறைகளைக் கற்றுக்கொள்வதை நோக்கமாகக் கொண்டது.
அதுமட்டுமல்லாமல், கடந்த 1997-ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆசிய நிதி நெருக்கடியின் போது, பிற நாடுகள் சர்வதேசய நாணய நியத்தின் உதவியை நாடியப் போது, துன் மகாதீர் தனது திறனால் நாட்டின் பொருளியல் வளர்ச்சியை ஒரே ஆண்டில் மீட்டெடுத்தார். அப்போது சரிவுப் பாதையிலிருந்து மலேசியாவை மீட்டெடுப்பதில் டாக்டர் மகாதீர் முக்கியப் பங்காற்றியிருந்தார்.
கல்வி துறையில் மாரா, தொழில்நுட்ப கல்வி, Multimedia Super Corridor, சைபர்ஜெயா போன்ற திட்டங்களைக் கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்தார்.
22 ஆண்டுகள் பிரதமர் பதவியிலிருந்த துன் மகாதீர், மீண்டும் 15 ஆண்டுகளுக்குப் பின் 2018-ஆம் ஆண்டு தனது 92 வயதில் மலேசியாவின் 7-ஆவது பிரதமராகப் பதவியேற்ற உலகின் மூத்தப் பிரதமராகத் திகழ்ந்தார்.
அவரது உலகளாவிய பெருமை, 2019-ஆம் ஆண்டு Fortune Magazine வெளியிட்ட உலகின் 50 சிறந்த தலைவர்களின் பட்டியலில் இடம் பெற்றதில் வெளிப்படுகிறது.
பதவியிலிருந்து விலகி சென்றாலும் நடப்பு அரசியல் சூழலுக்கு எதிராக குரல் கொடுப்பதைத் துன் மகாதீர் இன்னும் நிறுத்தவில்லை. தனக்கெதிராக பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டாலும் அதற்கு எல்லாம் செவி சாய்க்காமல் துன் மகாதீர் தொடர்ந்து தனது சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றார்.
இந்தப் பெருந்தலைவரைப் பற்றி பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் அதையெல்லாம் கடந்து நாட்டின் வளர்சியில் அவரது அளப்பரியப் பங்கை அனைவரும் போற்ற வேண்டும்.
100-ஆவது வயதில் துன் மகாதீர் நாட்டின் வரலாற்றில் இடம்பிடித்த நபராக மட்டுமல்லாமல் அவரே வாழும் வரலாறாக திகழ்கின்றார்.
- அஸ்வினி செந்தாமரை
Subscribe to:
Posts (Atom)
நூறாவது அகவையில் தடம் பதிக்கின்றார் மலேசியாவைச் செதுக்கிய சிற்பி
படம் 1: பிறந்த நாள் வாழ்த்து 2025-ஆம் ஆண்டு 10-ஆம் தேதி மலேசிய அரசியல் வரலாற்றில் 100 வயதை எட்டிய முதல் அரசியல் தலைவர் என்ற பெருமையை நா...

-
புரியாதப் புதிராய் இருக்கும் சிதம்பர இரகசியம் சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில் என்ற தலத்தின் பெயரைக் கேட்டால் நம் நினைவிற்கு வருவது ச...
-
படம் 1: பிறந்த நாள் வாழ்த்து 2025-ஆம் ஆண்டு 10-ஆம் தேதி மலேசிய அரசியல் வரலாற்றில் 100 வயதை எட்டிய முதல் அரசியல் தலைவர் என்ற பெருமையை நா...
-
நாட்டையே உலுக்கி வரும் ஆட்டிசம் (Autism) குறைப்பாடுள்ள ஆறு வயது சிறுவன் ஜெய்ன் ராயானின் கொலை வழக்கு பலரது நெஞ்சைப் பதற செய்தது. இந்த அ...